சமயம் வளர்த்த சான்றோர் 06: திருநாவுக்கரசர்


கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

சைவநெறி தழைக்கச் செய்த சான்றோர் பெருமக்களுள் திருநாவுக்கரசர் சிறப்பிடம் பெறுபவர். ஈசனை அரசனாகவும் தன்னை அடிமையாகவும் கொண்டு வழிபாடு செய்தார். இந்நெறி அடிமை நெறி அல்லது தாச மார்க்கம் என்று அறியப்படுகிறது.  

சைவ சமயமானது வடநாட்டில் இருந்து வந்த சமண, பவுத்த சமயங்களின் ஆதிக்கத்தால் பொலிவிழந்து கிடந்தது. தமிழ் வேந்தர்களும் மக்களும் அச்சமயங்களில் மூழ்கிக் கிடந்தனர். சமயம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழிபாட்டுச் சடங்குகள், வழிபாட்டு மொழி முதலியவற்றையும் வடிவமைக்கும் காரணியாக விளங்குகிறது. அப்படி பழந்தமிழகம் தனக்கே உரிய இயல்புகளை இழந்த தருணத்தில் திருநாவுக்கரசர் போன்ற அடியார் பெருமக்கள் தோன்றி தமிழகத்தையும் தமிழரையும் தமிழ்ப் பண்பாட்டையும் மீட்டெடுத்தனர்.  

அடியார்க்கு இன்னமுது அளிப்பதன் மூலம் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பும் அவர்களது ஈகைத்தன்மையும் புலனாகிறது. ஆன்மிகம் தழைக்க  கோயில்கள் எழுப்பினர், திருநீற்றின் மகிமையை அடியார்கள் உலகறியச் செய்தனர்.  

x