அதிமுகவில் சசிகலா இணைந்தால் நாங்கள் ஏன் குறுக்கே நிற்கவேண்டும்?- எச்.ராஜா விறுவிறு பேட்டி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

கட்சிப் பதவி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பவர் எச்.ராஜா. கட்சிக்காரர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பவரும் அவரே. மதுரை புறநகர் மாவட்ட பாஜக அலுவலகம் சூறையாடப்பட்ட தகவல் அறிந்ததும் மதுரைக்கே வந்து போராடினார் ராஜா. அப்போது அவர் ‘காமதேனு' மின்னிதழுக்காக அளித்த சிறப்புப் பேட்டி...

2016-ல் ‘கழகம் இல்லாத தமிழகம்' என்று பிரச்சாரம் செய்த பாஜக, இப்போது ஒரு திராவிடக் கட்சியுடன் சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறதே? அப்படியானால் உங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டீர்களா?

நாங்கள் ‘கழகம்' என்று சொல்வது திராவிடர் கழகத்தின் சித்தாந்தத்தைத்தான். கட்சி பெயரில் ‘கழகம்' இருக்கிறது என்பதற்காக, எல்லாக் கட்சியும் திராவிடர் கழகம் ஆகிவிடாது. நம்மூரில் திருவள்ளுவர் கழகம், கம்பன் கழகம் போன்ற சங்கங்களின் பெயரில் கூடத்தான் ‘கழகம்' இருக்கிறது. எப்போது எம்ஜிஆர் மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வீரவாள் பரிசளித்தாரோ, அப்போதே அவர் இந்து விரோத சக்தியல்ல என்பது உறுதியாகிவிட்டது. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற இந்து விரோத, தேச விரோத கும்பல் முன்வைக்கிற சித்தாந்தத்துக்குத்தான் நாங்கள் எதிரியே தவிர, அதிமுகவுக்கு அல்ல.

x