டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in
தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கும் தமிழகத்தில், ஒவ்வொரு கட்சியிலும் புதுப் புது சலனங்கள் தென்படுகின்றன. திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் நேரடியாகவே இளைஞரணிக்குச் செயலாளராக வந்த உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய செயல்பாடுகள் ஓர் உதாரணம்.
கட்சி நடவடிக்கையில் தலையிடுவது, சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது என்று கடந்துகொண்டிருந்த உதயநிதியின் நடவடிக்கைகள் இன்று கட்சியின் தலைவருக்கே உத்தரவிடும் அளவுக்கு மாறியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதுதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
வரம்பை மீறிய முக்கியத்துவம்