தேர்தலில் விவசாயிகளின் ஆதரவு யாருக்கு?- அறுவடைக்குப் போட்டிபோடும் அரசியல் கட்சிகள்


கரு.முத்து
muthu.k@kamadenu.in

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் உயிர்ப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு மறுத்து வருவதால், ஏழு கட்டப் பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியிலும், மக்கள் சந்திப்புக்களிலும், தான் விவசாயிகளின் நண்பன் என்பதை அழுத்திச் சொல்கிறார் பிரதமர் மோடி. பாஜக அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசு என்று மத்திய அமைச்சர்களும் நாடெங்கும் பரப்புரை செய்கிறார்கள்.

விவசாயிகள் மீது புதிய பாசம்

x