சமயம் வளர்த்த சான்றோர் 04: பகவத் ராமானுஜர்


கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

ஆன்மநெறி சிந்தனை வழியே பக்திநெறியை வளர்த்து வாழ்க்கையில் அமைதியையும் அன்பையும் தழைக்கச் செய்த ஞானிகளுள் ஒருவர் ராமானுஜர். ஆழ்வார்களும் நாயன்மார்களும் சமத்துவத்தை போதித்தாலும், ராமானுஜர் தாம் சென்ற இடமெல்லாம்,  தேவையற்ற சமுதாய கட்டுப்பாட்டை, மூடப் பழக்கவழக்கங்களை உடைத்தெறிய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்தார். மேலும், பல சமுதாய சீர்திருத்தங்களையும் செயல்படுத்தினார்.  

ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் ஆசூரி கேசவாசாரியார் – காந்திமதி தம்பதி வசித்து வந்தனர். அனைத்து வேள்விகளையும் செய்பவர் ஆசூரி கேசவாசாரியார் என்பதால், வேத பண்டிதர்கள் அவருக்கு ‘ஸர்வக்ரது’ என்ற பட்டத்தை வழங்கினார்கள். இதனால் ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று அவர் அழைக்கப்பட்டார்.  

திருமணமாகி வெகுநாட்கள் ஆகியும் இத்தம்பதிக்கு குழந்தைப்பேறு கிட்டாததால், தெய்வத்திடம் முறையிடலாம் என்று எண்ணி, இருவரும் ‘விருத்தாரண்யம்’ என்று அழைக்கப்பட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தலத்துக்கு சென்று வேண்டுகின்றனர்.  

x