நடப்பது அம்மாவின் அரசு என்று சசிகலாவுக்கும் புரியும்!- தளவாய் சுந்தரம் தடாலடி


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தேர்தல் பரப்புரையில் அதிமுக தலைவர்கள் முழுமூச்சாக இறங்கிவிட்டார்கள். பலரும் தங்கள் சொந்தத் தொகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியும், அதிமுகவின் அமைப்புச் செயலர்களில் ஒருவருமான தளவாய் சுந்தரமும் கன்னியாகுமரி தொகுதியில் தினம் ஒரு கிராமத்தில் மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

‘அதிமுகவைப் புறக்கணிப்போம்’ எனப் பெண்களைத் திரட்டிப் பிரச்சாரம் செய்துவரும் திமுகவுக்குப் பதிலடியாக, மகளிர் குழுக்களைத் திரட்டி, ‘திமுகவைப் புறக்கணிக்க வேண்டும்’ எனும் பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்திருக்கிறார். நாகர்கோவிலை அடுத்த ‘பறக்கை’ பகுதியில் மகளிர் குழுக்களிடம் பேச வந்திருந்த தளவாய் சுந்தரத்திடம் ஒரு பேட்டி:

தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பிரதானமாக முன்வைக்கும் அம்சங்கள் என்னென்ன?

x