சர்ச்சையாகும் ‘அரங்கு நிறைந்த’ அனுமதி!


தைப் பொங்கலுக்கு விஜய் நடித்த மாஸ்டரும் சிம்புவின் ஈஸ்வரனும் திரைக்கு வருகின்றன. இப்போதெல்லாம் விஜய் படம் என்றாலே ஏதாவது சர்ச்சை கிளம்பிவிடுகிறது என்று அலுத்துக் கொள்கிறார்கள் ரசிகர்கள். தமிழக முதல்வரை விஜய் சந்தித்துப் பேசிய பிறகு, தியேட்டர்களில் அரங்கு நிறைந்த (100 சதவீதம்) பார்வையாளர்கள் அனுமதிக்கு வழி பிறந்தது. இதை திரையுலகம் வரவேற்கிறது. மறுபக்கம் கரோனா பரவல் முடிவுக்கு வராத நிலையில் இந்த அனுமதி ஆபத்தானது என்கிறார்கள். மருத்துவர் ஒருவர் இந்த முடிவு தற்கொலைக்கு சமமானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். குஷ்புவோ, “பயம் இருப்பவர்கள் வராதீர்கள், இது ஒன்றும் கட்டாயமில்லையே” என்கிறார். “தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பரவாத கரோனா தியேட்டரில்தான் பரவுமா?” என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். 

வதந்திகளை நம்ப வேண்டாம். - பிரதமர் மோடி!
அதான் ஜீ நீங்க எது சொன்னாலும் நாங்க நம்பறதே இல்லை!- தர்ம அடி தர்மலிங்கம்

தமிழகத்தில் புத்தாண்டு மது விற்பனை கடந்த ஆண்டை விட 17 கோடி ரூபாய் குறைவு!
2,500 கொடுத்துருக்கீங்கள்ல... பொங்கலுக்கு வருவாங்க.- ஹரி ராஜா

2021-ல் அதிமுக ஆட்சியமைத்ததும் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை.- ராஜன் செல்லப்பா
ஏன்... இப்ப பிஜேபி ஆட்சி நடக்குதா?!- ரஹீம் கஸாலி

x