நித்திரையைத் தொலைத்த நிதீஷ்... ஆட்சிக்குக் குறிவைக்கும் ஆர்ஜேடி..!


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

பிஹாரில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் எனும் சமிக்ஞைகள் மெல்ல வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வகுத்த ‘வியூகங்க’ளால், பலவீனமான நிலையில் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நிதீஷ் குமார், பல்வேறு நெருக்கடிகளால் நிம்மதி இழந்து தவிக்கிறார். ‘பதவி விலகத் தயார்’ என்று சொல்லும் அளவுக்கு விரக்தியின் எல்லைக்கு அவர் சென்றிருக்கிறார். போதாதகுறைக்கு, நூலிழையில் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), எப்படியேனும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு காய் நகர்த்துகிறது.

கடந்த அக்டோபர் 28 தொடங்கி, மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல், நிதீஷின் வாழ்க்கையில் மறக்கவே முடியாத தேர்தலாக அமைந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி 115 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக 74 இடங்களில் வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த லோக் ஜனசக்தி கட்சி, கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறி ஐக்கிய ஜனதா தளத்தை மட்டும் குறிவைத்து போட்டியிட்டதும், அதன் காரணமாக வாக்குகள் சிதறி ஐக்கிய ஜனதா தளம் பல தொகுதிகளில் தோல்வியடைந்ததும் பாஜகவின் தந்திரங்கள் என்றே கருதப்படுகிறது.

அணிமாறிய அறுவர்

x