10 லட்ச ரூபாய்க்கு 15 ரூபாய் நோட்டு..! கலைஞர் தமிழ்ச் சங்க விழா கலாய்ப்பு


குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

ரஜினி தனது அரசியல் துறவறத்தை அறிவித்த அதேநாளில், காரைக்குடியில் கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 24-ம் 
ஆண்டு விழா. முன்னாள் அமைச்சர் தென்னவன் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடந்த இந்த விழாவில் பேசிய எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான சூர்யா சேவியர், பச்சைத் தண்ணியைக் குடித்துக் குடித்துக் கொண்டே ரஜினி - பாஜக கூட்டணியை பதம் பார்த்தார்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற தலைப்பில் பேசிய சூர்யா, “சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் சட்டமன்ற உறுப்பினர்
களாகவும் அமைச்சர்களாகவும் அமரவைத்து அழகுபார்த்தவர் கலைஞர். அதனால்தான் அவரை மட்டும் குறிவைத்துத் தாக்கினார்கள். 1967-ல் விட்ட அதிகாரத்தை மீண்டும் பறிக்கத் துடிக்கிறது ஒரு கூட்டம். நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்... எச்.ராஜாவெல்லாம் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தால் எப்படி இருக்கும் சுற்றுச்சூழல்?

அல்வா கொடுப்பதில் கலைஞரை யாராலும் மிஞ்ச முடியாது. அவர்கள்,  ‘விவேகானந்தர்... விவேகானந்தர் ’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். சத்தமில்லாமல் அவருக்குப் பக்கத்தில் 133 அடியில் திருவள்ளுவர் சிலையைக் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்துவிட்டார் கலைஞர்.  அவர்கள்  ‘மகாபாரதம்’ என்றார்கள். பெருசு சும்மா இருக்காம, ‘சிலப்பதிகாரம்’ என்றது. அடுத்து,  ‘ராமாயணம்... சீதை’ என்றெல்லாம் சொன்னார்கள். சீதையை மறுக்கவில்லை. அதற்குப் பதிலாக கண்ணகியை மறக்காமல் கொண்டு வந்து வைத்தார் கலைஞர். இப்படி எல்லாம் செய்ததால்தான்  கலைஞரை தாக்குகிறார்கள்” என்று சொன்னவர், ரஜினியின் அரசியல் நோ என்ட்ரிக்கு தமாஷ் கதை ஒன்றையும் எடுத்துத் தாளித்தார்.

x