கழிப்பறை இல்லாத கல்விக்கூடங்கள்- பொறுப்புணர்வு எப்போது வரும் அரசுகளுக்கு?


ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

“நாடு விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும், பள்ளிச் சிறுமிகள் சிறுநீர்க் கழிக்கப் புதர்களைத் தேடி ஓடும் கதியில் நம் பள்ளிக்கூடங்கள் இருப்பது வெட்கக்கேடில்லையா?” - முகத்தில் அறையும் இந்தக் கேள்வி, 2016-ல் உலகக் கழிப்பறை நாளன்று, தமிழகக் கல்வித் துறையை நோக்கி சென்னை உயர் நீதிமன்றத்தால் எழுப்பப்பட்டது.

தமிழகத்தில் மட்டுமல்ல... நாடு முழுவதும் ஆண்டாண்டு காலமாகத் தொடரும் துயரம் இது. பள்ளி வளாகத்தில் தூய்மையான கழிப்பிடம் இல்லாததால், ஆண்டுதோறும் 2 கோடி இந்திய மாணவிகள் பள்ளிப் படிப்பை இடையில் பாதியில் கைவிட்டிருக்கிறார்கள். எத்தனைப் பெரிய அவலம் இது!

2012-லேயே ஆறு மாதக் கெடு விதித்து,  பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் கட்டாயம் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். குறிப்பாக, மாணவிகளுக்குத் தனி கழிப்பிட வசதி செய்துதரும்படி ஆணையிட்டிருந்தது. ஆனால், அதை நிறைவேற்றுவதில் அரசுகள் முனைப்பு காட்டவேயில்லை. பிறகு, 2014-ல் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ்  ‘தூய்மை இந்தியா: தூய்மையான பள்ளி’ என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள பல பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஆனால், கழிப்பறையைக் கட்டிவிட்டாலே சுகாதாரம் வந்துவிடுமா என்ன?

x