இசை மனங்களை நனையவைக்கும் இணையம்- பேரிடர் காலத்தின் பேருதவிகள்


யுகன்
readers@kamadenu.in

பெருந்தொற்றுக் காலம் உருவாக்கியிருக்கும் பேரவலங்களில் ஒன்று கலையுலகத்தின் முடக்கம். வாழ்வாதாரத்துக்கே அல்லாடும் அளவுக்கு ஏராளமான கலைஞர்களை வாட்டியெடுத்துவிட்டது கரோனா. அதேசமயம், சக கலைஞர்களுக்குக் கைகொடுக்கும் வகையில் பல கலைஞர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். இணையத் தொழில்நுட்பம் இதற்கு உறுதுணையாக இருப்பதுதான் இதன் சிறப்பு.

திரைகடல் தாண்டிய உதவி

கரோனா ஊரடங்கு தொடங்கிய மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே, இணையத்தின் வழியாக நிகழ்ச்சிகள் நடத்தி எளிய கலைஞர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளை செய்யத் தொடங்கிவிட்டனர் இசைக் கலைஞர்கள். கடந்த ஆண்டு மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதைப் பெற்ற பாடகி எஸ்.சௌம்யா, ஊரடங்கு காலத்தில் ஒரு இசைத் திருவிழாவையே நடத்தி கலைஞர்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொண்டார்.

x