திடீர் மரணம்... திடுக் கைதுகள்! - கட்சிப் பணத்தைக் கையில் வைத்திருந்தாரா துரைக்கண்ணு?


கரு.முத்து
muthu.k@kamadenu.in

தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணுவின் மரணத்தைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் எல்லாம் ஒருவழியாக அடங்கி, மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது அவரது குடும்பம். அவரது இளைய மகன் அய்யப்பன் மீதான தமிழக அரசு மேலிடத்தின் இறுக்கமான பிடியும், கடுமையான கண்காணிப்பும் சற்று தளர்ந்துள்ளன. துரைக்கண்ணுவின் பினாமிகள் எனும் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அனைவரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் - போலீஸாரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி!

நடந்தது என்ன?

மூச்சுத்திணறல் காரணமாக அக்டோபர் 13-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரைக்கண்ணு. பின்னர் கரோனா தொற்றுக்குள்ளான அவர் அக்டோபர் 31-ம் தேதி காலமானார். எனினும், மூன்று நாட்களுக்கு முன்பே அவர் இறந்து விட்டதாகவும், கட்சி மேலிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை மீட்கவே அவரது மரணம் அறிவிக்கப் படாமல் தாமதம் செய்யப்பட்டது என்றும் சர்ச்சைகள் எழுந்தன.

x