என் மகளுக்கு இப்படி நடந்துருந்தா நான் சும்மா விடுவேனா?- அபயா வழக்கின் சாட்சி ‘அடக்கா’ ராஜூ பேட்டி


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

கடந்த 28 ஆண்டுகளாகக் கேரளத்தின் மனசாட்சியை உறுத்திவந்த அபயா கொலை வழக்கின் தீர்ப்பு வெளியாகிவிட்டது. கன்னியாஸ்திரியான அபயாவின் மரணத்துக்கான நீதி, மத நிறுவனங்களின் ஆதிக்கம், பணம், வாக்கு அரசியல் அத்தனையையும் கடந்து நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

தாமஸ் - லீலாம்பா தம்பதியின் மகளான அபயா,  கோட்டயத்தில் உள்ள புனித பயஸ் கான்வென்டில் தங்கி, பட்டப்படிப்பை மேற்கொண்டுவந்தார். 1992 மார்ச் மாதத்தில் ஒருநாள் கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணற்றில் அபயா சடலமாகக் கிடந்தார். இது கொலையா தற்கொலையா என வாதங்கள் வெடித்தன. இத்தனை ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் குற்றவாளிகளான பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுளும், கன்னியாஸ்திரி செபிக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். முன்னாள் திருடன் ‘அடக்கா’ ராஜூவின் சாட்சியே இந்த வழக்கின் துருப்புச் சீட்டாகக் கருதப்படுகிறது. திருவனந்தபுரத்தில் ‘காமதேனு’வுக்காக ‘அடக்கா’ ராஜூவைச் சந்தித்தேன்.

இந்தக் கொலை வழக்கின் பின்னணி என்ன?

x