அதிமுக அரசு ஆண்மையுள்ள அரசு; அடிமை அரசல்ல!- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

அதிமுகவின் சுறுசுறுப்பான அமைச்சர்களில் ஒருவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். கரோனா, புயல் போன்ற பேரிடர் காலங்களில் சிறப்பாகப் பணியாற்றியவர். மந்திரி மட்டுமல்ல, அரசியலில் எப்போது எந்தப் பக்கம் சாதகமான காற்றடிக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் தந்திரியும்கூட. அவருடன் ஒரு பேட்டி.

 புயல், மழை போன்ற வழக்கமான பேரிடர்களுக்கும், கரோனா பேரிடருக்கும் என்ன மாதிரியான வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்? கரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா?

 கரோனா பேரிடர் முற்றிலும் புதிய அனுபவம். பேரிடர் மேலாண்மையில் ப்ரி டிசாஸ்டர், டூரிங் டிசாஸ்டர், போஸ்ட் டிசாஸ்டர் என்று மூன்று கட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எங்களிடம் தெளிவான திட்டமிடல் இருக்கும். கரோனா விஷயத்தில் இப்படி எதுவுமே கைவசம் இல்லை. நிறைய ஆலோசனைகள், பரிசோதனை முயற்சிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கெடுபிடிகள், வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்குதல் என்று நிறைய உழைக்க வேண்டியதிருந்தது. முதல்வர், துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் தூங்காமல் பணியாற்ற வேண்டியதிருந்தது.

x