எம்ஜிஆரைப் பங்குபோடும் பங்காளிகள்!


தேர்தல் வந்துவிட்டது. அதனால் ஆளாளுக்கு எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி அடித்துக்கொள்கிறார்கள். ரஜினி, “நான் எம்ஜிஆர் ஆட்சியைத் தருவேன்” என்றார். கமல்,  “நான் அவர் மடியில் தவழ்ந்தவன்” என்கிறார். எடப்பாடியோ, இவர்களை கிண்டல் செய்து வருவதோடு  “எம்ஜிஆர் தொடங்கிய இயக்கமான அதிமுகவுக்குத்தான் அவரை உரிமை கொண்டாட உரிமை உண்டு” என்கிறார். பாஜகவும் விட்டபாடில்லை; சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரை வைத்ததோடு மட்டுமல்லாமல், அவ்வப்போது எம்ஜிஆர் பற்றியும் பேசிவருகிறது. ஆளாளுக்கு எம்ஜிஆரை பங்குபோட அடித்துக்கொள்கிறார்கள் என்று பலரும் விமர்சித்தாலும், சிலர் இதை காரணமாக வைத்தே எல்லோரும் ஒன்று கூடி விடுவார்களோ என்றும் கேள்வி எழுப்புகின்றனர். பெரும்பாலும் எம்ஜிஆர் என்ற பெயருக்கு ஒரு ஓட்டு வங்கி இருக்கிறது. இப்போது எல்லோரும் எம்ஜிஆர் பெயரை மக்கள் மனதில் ஆழமாகப் பதியவைக்க முயற்சிக்கிறார்கள். இது எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பது போகப்போகத்தான் தெரியும்!


*************************

வேளாண் சட்ட மசோதாவிற்கு நான் கியாரண்டி. - குஷ்பு
அதுவரை நீங்க கட்சி மாறாமல் இருக்குறதுக்கு யாரு கியாரண்டி?- மெத்தவீட்டான்

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கரோனா. - செய்தி
25 வருசமா உருட்டிப் பெரட்டி கடைசியா டிசம்பர்னு ஒரு முடிவு எடுத்தேன்... இப்ப புதுவைரஸ் பரவுதாம்..! -  ரஜினி மைண்ட் வாய்ஸ்.- ஜேம்ஸ்

x