மார்கழி உற்சவம்: இணையத்திலும் வசப்படுத்தும் இசை!- சென்னையிலிருந்து பரவும் செவ்வியல் கலை


வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

பாரம்பரியமான இசை விழாக்களை ஏறக்குறைய ஒருமாத காலத்துக்குத் தொடர்ந்து நடத்தும் பெருமைக்குரிய நகரம் சென்னை. கடந்த 90 ஆண்டுகளுக்கும் அதிகமாக நிகழ்ந்துவரும் அற்புதம் இது. அதனாலேயே யுனெஸ்கோவால் கலாச்சார நகராகச் சென்னை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சென்னை பெறும் இந்தப் பொலிவைக் கரோனா பெருந்தொற்று இந்த ஆண்டு பறித்திருக்கிறது.

தடைக்கற்களையே படிக்கற்களாக மாற்றிக்கொள்ளும் மனித மூளை, கரோனா ஏற்படுத்தியுள்ள சவாலையும் இணையத் தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்கொண்டு வருகிறது. இதுவரை டிசம்பர் மாதத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து இசை விழாவுக்காக இந்தியாவுக்கு ரசிகர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இந்த ஆண்டு ரசிகர்கள் இருக்கும் இடத்துக்கே இசை சென்று சேர்ந்துகொண்டிருக்கிறது - இணையத்தின் மூலம்!

120 நிகழ்ச்சிகள்

x