போஸ்டர் போர்! - கோதாவில் குதித்த ரஜினி ரசிகர்கள்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

ரஜினி கட்சி தொடங்குவது உறுதி என்று தெரிந்ததும், அவரது பிறந்தநாள் அன்று அவரது ரசிகர்கள் போஸ்டர் புரட்சியே நடத்தி முடித்துவிட்டார்கள்.

போஸ்டர் அரசியலில் கரைகண்ட கரைவேட்டிக்காரர்களையே வாய்பிளக்க வைக்கும் அளவுக்கு அத்தனைப் போஸ்டர்கள். ‘இப்ப இல்லன்னா எப்பவுமே இல்லை!’ ‘எங்க கொடி பறக்க வேண்டிய இடத்தில வேற எவன் கொடிடா பறக்கும்?’ எனத் தொடங்கி ஒட்டப்பட்ட போஸ்டர்களின் வாசகங்களை மட்டும் எடுத்து ஒரு புத்தகமே போட்டுவிடலாம்.

‘‘1995-ல் ‘பாட்ஷா’ படம் வெளியானபோதும், 1996 தேர்தலில் திமுக-தமாகா கூட்டணிக்குத் ரஜினி ஆதரவு தெரிவித்த சமயத்திலும் அவரது ரசிகர்கள் லட்சக்கணக்கில் போஸ்டர்களை ஒட்டினார்கள். கிட்டத்தட்ட அதே அளவு போஸ்டர்கள் தமிழகத்தை வியாபித்தது இப்போதுதான். குறிப்பாக, ரஜினி குடியிருக்கும் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்கள்தான்’’ என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

x