வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
ஒரு மக்களவைத் தேர்தலுக்கு நிகரான பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல். 55 இடங்களுடன் தனிப்பெருங் கட்சியாக வென்றிருந்தாலும் மாநகராட்சி மேயர் நாற்காலியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தவித்து நிற்கிறது முதல்வர் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்). பாஜக 48 இடங்களில் வென்று இரண்டாம் இடம் பிடித்திருப்பது மிக முக்கியமான நகர்வு.
தனது கட்சியின் வெற்றி மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த சந்திரசேகர் ராவை இந்தத் தேர்தல் முடிவுகள் திடுக்கிடச் செய்திருக்கின்றன.
மேயர் யார்?