எங்கள் போராட்டம் மக்கள் புரட்சியாக வெடிக்கும்!- விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் தர்ஷன்பால் ஆவேசம்


ஆர்.ஷபிமுன்னா
shaffimunna.r@hindutamil.co.in

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் முடிவு தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்துக்காக முப்பதுக்கும் மேற்பட்ட சங்கங்களை ஒன்றிணைத்திருப்பவர் பஞ்சாபின் ‘கிராந்திகாரி கிஸான் யூனியன்’ எனும் விவசாய அமைப்பின் தலைவரான டாக்டர் தர்ஷன்பால். விவசாயிகள் இந்தச் சட்டங்களை இத்தனைத் தீவிரமாக எதிர்ப்பது ஏன் என்பது குறித்து ‘காமதேனு’ இதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இது:

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோருவதன் பின்னணி என்ன?

 மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களால், இதுவரை எங்களுக்குக் கிடைத்துவந்த குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) ஓரிரு வருடங்களில் முடிவிற்கு வந்துவிடும். ஏனெனில், இந்த எம்எஸ்பியில் விவசாயிகள் தங்கள் பயிர்களை விற்பனை செய்ய சட்டப்படியாக எந்த உரிமையும் அளிக்கப்படவில்லை. முன்பிருந்த வேளாண் விளைபொருட்கள் சந்தைக் குழு (ஏபிஎம்சி) முறையில் அமைந்திருந்த ஒரு கட்டமைப்பு இதைவிட மிகச் சிறப்பாகப் பலன் அளித்தது. இதன்படி பஞ்சாபின் விவசாயிகள் எந்த ஒரு பயிரையும் தனியார் மண்டிகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லாமல், ஏபிஎம்சி முறையில் அரசிடம் விற்பனை செய்துவருகின்றனர். இதில் அதிகப் பலன் இருப்பதால்தான் பிஹார், உத்தராகண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் தங்களது விளைபொருட்களைக் கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள். இதற்குப் பஞ்சாபைப் போல் அவர்கள் மாநிலங்களின் அரசுகள் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்காதது காரணம்.

x