கடவுளின் தேசத்தில் கரோனா!- மலையாளிகளின் மனதை வென்ற விஜயபாஸ்கர்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

போராட்டமும், கேரளமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆனால், கேரளம் இன்றைக்கு கரோனா பீதியில் உறைந்திருக்கும் நிலையில், போராட்டங்களுக்குக்கூட மக்கள் அணி திரள்வதில்லை. சமீபத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநில அளவில் நடத்திய போராட்டத்தில், மிகக் குறைவான ஆட்களே கலந்துகொண்டார்
கள். ஒவ்வொரு பகுதியிலும் அதிகபட்சம் ஐந்து பேர் மட்டுமே திரண்டு ‘ஆள் கூட்டம் இல்லாத எதிர்ப்பு’ எனப் பதாகை ஏந்தி போராடி வீடு திரும்பிவிட்டார்கள். கரோனா அச்சம்தான் இதற்கெல்லாம் காரணம்.

இதுவரை, கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை களுக்காகக் கேரள சுகாதாரத் துறை பாராட்டப்பட்டுவரும் நிலையில், இவ்விஷயத்தில் தமிழகச் சுகாதாரத் துறையின் துரித நடவடிக்கைகளுக்கும் கேரள மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகிறார்கள். குறிப்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

கேரளத்தில் நுழைந்தது எப்படி?

x