எனக்கொரு தாய் இருக்கின்றாள்!- ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஓர் அழகிய கிராமம்


பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com

ஒரு குழந்தையை வளர்ப்பதற்கே ஓராயிரம் சிரமங்களை எதிர்கொள்வதாக இன்றைக்குப் பலரும் சலித்துக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. ஆனால், ஏழெட்டுக் குழந்தைகளை, அதுவும் ரத்த சம்பந்தம் இல்லாத, ஆதரவற்ற குழந்தைகளை ஒரு தாய் பராமரிக்கும் அதிசய இல்லங்கள் உண்டு. கிழக்கு தாம்பரத்தில், அமைதியான சூழலில் அமைந்திருக்கும் எஸ்.ஓ.எஸ் கிராமம் -சட்நாத் குழந்தைகள் இல்லங்கள்தான் அவை!

ஐந்து ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இந்தக் கிராமத்தில் மொத்தம் 15 வீடுகள். இங்குள்ள குழந்தைகளைத் தங்கள் சொந்தக் குழந்தைகளாகப் பாசத்தைப் பொழிந்து வளர்த்து ஆளாக்குகிறார்கள் இங்கிருக்கும் அம்மாக்கள். 3 படுக்கை அறைகள், கூடம், 2 குளியலறை, கழிப்பறையுடன்  டிவி, ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர் என்று எல்லா வசதிகளும் நிறைந்த வீடுகளில் குழந்தைகள் ஆரோக்கிய
மாக வளர்கிறார்கள். இதுதான் எஸ்.ஓ.எஸ். கிராமத்தின் சிறப்பம்சம்.

ஆஸ்திரிய உதாரணம்

x