பொதுத் தேர்வுகளால் கற்றல் தடைபடலாமா?


உமா
uma2015scert@gmail.com

தற்போது 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடந்துவருகின்றன. தேர்வுக்குத் தங்களைத் தயார் செய்யும் பணிகளில் மாணவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். ஆசிரியர்களும் அது தொடர்பான பணிகளில் மூழ்கியிருக்கிறார்கள். அதேசமயம், தேர்வு எழுதும் மாணவர்களைத் தவிர பிற வகுப்பு மாணவர்களின் கல்வி தடைபடாமல் நடந்து கொண்டிருக்கிறதா? 

குறிப்பாக... பொதுத் தேர்வின் மையங்களாக விளங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் மூன்றாம் பருவம் எப்படிக் 
கழிகிறது?

இந்தக் கேள்விக்கான விடை, சற்று கசப்பானதுதான். ஆம், தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர, பிற வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர்களில் பலர், தேர்வுப் பணிக்காகச் சென்றுவிடுவதால், பிற மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகவே செய்கிறது.

x