பள்ளிக்குள் பெற்றோர்களையும் வரவேற்போம்!


உமா
uma2015scert@gmail.com

குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பள்ளி, ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு மட்டுமல்ல… பெற்றோர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பள்ளிகளுடன் பெற்றோர்களை இணைக்காத கல்விமுறை வெற்றியடைவதில்லை என்பதுதான் யதார்த்தம். பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுவில் அவர்களையும் இடம்பெறச் செய்திருக்கிறது கல்வி உரிமைச் சட்டம். அரசமைப்புச் சட்டத்திலும் பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், நம் கல்வி அமைப்பில் பெற்றோர்களின் முக்கியத்துவம் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதா, தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடத்தின் மதிப்பைப் பெற்றோர் உணர்ந்திருக்கிறார்களா என்பதையெல்லாம் அலச வேண்டியது அவசியம்.
பெற்றோர்களை வரவேற்கும் பள்ளிகள்மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உரிய மதிப்பளிக்கும் பள்ளிகளைப் பற்றி முதலில் பார்த்துவிடுவோம்.

புதுக்கோட்டை என்றாலே நெடுவாசல் கருப்பையாவின் பெயரை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரை சொல்வார்கள். நெடுவாசல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த அவர், பெற்றோர்களை வரவேற்று, அவர்களின் ஆலோசனைகளுக்குச் செவிமடுத்து, அதன்படி பள்ளியின் முகத்தையே மாற்றியமைத்தவர். தற்போது பனங்குளம் வடக்கு நடுநிலைப் பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றுவிட்ட அவர், அந்தப் பள்ளியையும் பெற்றோரின் பங்களிப்புடன் சிறப்பாக இயங்கவைக்கிறார். பள்ளி என்பது ஊர் மக்களின் சொத்து என்பதில் உறுதியுடன் இருக்கிறார்.

x