கோத்தபயவின் அடுத்த குறி!- முன்கூட்டியே தேர்தல் நடப்பதன் பின்னணி


சந்தனார்
readers@kamadenu.in

தனது அரசியல் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தானே எழுதத் திட்டமிட்டிருக்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச. இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அவர் அறிவித்திருப்பது அதன் ஒரு பகுதிதான். ஆகஸ்ட் மாதம் வரை தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருக்கும் நிலையில், அதிபர் அதை முன்கூட்டியே கலைத்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 25-ல் தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

கோத்தபயவின் இந்த நகர்வு ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். மேலும், இந்தத் தேர்தலில் அவரது இலங்கை பொதுஜன முன்னணி (எஸ்எல்பிபி) கட்சி வெற்றி பெற அவர் முன்னெடுக்கப்போகும் உத்திகளும், ஒருவேளை வெற்றிபெற்றுவிட்டால் அதை வைத்து நிறைவேற்றிக்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் விஷயங்களும் இலங்கை அரசியலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இரண்டாவது முறை

x