இது எனக்கில்லை... எங்க ஊருக்கு!- ஐஏஎஸ் அதிகாரி கேட்ட ஆச்சரிய வரதட்சணை


கரு.முத்து
muthu.k@kamadenu.in

ஒவ்வொரு ஆணுக்கும் தனது வருங்கால மனைவி பற்றி எண்ணற்ற கற்பனைகள் இருக்கும். குடும்பத்துக்கு ஏற்ற பெண், தனது பெற்றோரை நன்கு கவனித்துக்கொள்ளும் பெண் என்றெல்லாம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைச் சுமந்து திரிவார்கள். சிலர் நிறையவே வரதட்சணை நிபந்தனைகளையும் வைத்திருப்பார்கள். ஆனால், தன் ஊர் நலன் சார்ந்த அக்கறையையே வரதட்சணையாகக் கேட்டு அந்த நிபந்தனையை மனமுவந்து ஏற்றுக்கொண்ட மணமகளைக் கரம் பிடித்து மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறார் ஐஏஎஸ் அதிகாரி சிவகுருபிரபாகரன்.

பிப்ரவரி 26-ல், பேராவூரணி நீலகண்டவிநாயகர் கோயிலில் எளிமையாக நடைபெற்ற சிவகுருபிரபாகரன் - டாக்டர் கிருஷ்ணபாரதி திருமணத்துக்கு நேரில் வந்திருந்து வாழ்த்தியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்குள்தான் இருக்கும். ஆனால், திருமணத்துக்குப் பிறகு இந்த மணமக்களை ஒட்டுமொத்த தமிழகமும் வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. காரணம், சிவகுருபிரபாகரன் கேட்ட வரதட்சணை!

திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியரான சிவகுருபிரபாகரன், மருத்துவராகப் பணிபுரியும் கிருஷ்ணபாரதியிடம் அப்படி என்னதான் வித்தியாசமான வரதட்சணை கேட்டுவிட்டார் என்கிறீர்களா? “வாரத்தில் இரண்டு நாட்களாவது எங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும்” என்பதுதான் சிவகுருபிரபாகரன் கேட்ட வரதட்சணை.

x