லோக்கல் பாட்டுக்கு இறங்கி ஆடுவேன்!- விஜே ஆண்ட்ரூஸ் விறுவிறு


பகத்பாரதி
readers@kamadenu.in

விஜய் டிவியின்,  ‘ரெடி ஸ்டெடி போ’, ‘டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ்' நிகழ்ச்சிகளில், ரியோ ராஜுடன் சேர்ந்துத் தொகுப்பாளராகப் பணியாற்றியதின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் விஜே ஆண்ட்ரூஸ். ‘கலக்கப்போவது யாரு சீஸன் 2’ நிகழ்ச்சியின் ரன்னர்-அப், செய்தி வாசிப்பாளர், ‘ரேடியோ மிர்ச்சி’ ஆர்ஜே எனப் படிப்படியாகப் பன்முகம் காட்டிவரும் அவருடன் ஒரு பேட்டி:
    
`ரெடி ஸ்டெடி போ' நிகழ்ச்சி பற்றி..?

நான் தந்தி டிவியில ‘ஏழரை’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருந்தேன். அப்போதான் ‘ரெடி ஸ்டெடி போ’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்துச்சு. விஜேவாக முதலிலேயே ரியோவை செலக்ட் பண்ணிட்டாங்க. அவர்கூட யாரை ஜோடியா போடலாம்னு  யோசிச்சிட்டு இருந்துருக்காங்க. எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சதும், ரெண்டு பேரும் சேர்ந்து அதகளம் பண்ண ஆரம்பிச்சுட்டோம். முதல் எபிசோடுல இருந்தே ரெண்டு பேருக்கும் நல்லா செட் ஆகிடுச்சு. நான் ரியோவைக் கலாய்க்கிறதும், அவன் என்னைக் கலாய்க்கிறதும்னு கலகலப்பா போச்சு. இந்த காம்போ இப்போ வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு.
    
‘டான்ஸிங் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியில டான்ஸ் எல்லாம் ஆடியிருந்தீங்களே..?

எனக்குச் சின்ன வயசுல இருந்தே டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். நான் பக்கா மதுரைக்காரன். அதனால, லோக்கல் பாட்டு போட்டா இறங்கி ஆடுவேன். இந்த நிகழ்ச்சியோட ஃபைனல்ல கூட சாண்டி மாஸ்டர் கோரியோகிராபி பண்ணி ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன். நிகழ்ச்சியில அப்பப்போ நானும், ரியோவும் சேர்ந்து டான்ஸ் ஆடுவோம். அப்படி ஒருநாள் நான் ஆடும்போது சாண்டி மாஸ்டர் உன்னிப்பா கவனிச்சிருக்கார். அதனால அவர் எனக்கு குத்துப்பாட்டு வரும்னு அதுக்கேற்ற மாதிரி கோரியோகிராப் பண்ணினார். என் டான்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது!

x