வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
தேர்தல் வியூக வகுப்பாளராகவும், பகுதி நேர அரசியல்வாதியாகவும் அறியப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார். ஆம், பிஹாரைச் சேர்ந்தவரான பிரசாந்த், ‘பாத் பிஹார் கி’ (பிஹாரைப் பற்றிப் பேசுவோம்) எனும் முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் 100 நாட்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிதீஷ் குமார் ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டிப் பிரச்சாரம் செய்யக் களமிறங்கிவிட்டார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு நிதீஷ் குமார் ஆதரவளித்ததைக் கடுமையாக விமர்சித்ததற்காக ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரசாந்த், இப்போது நிதீஷுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்திருக்கிறார். வெவ்வேறு கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு வியூக வகுப்பாளராகப் பணிபுரிந்து வரும் பிரசாந்த், இப்போது கொள்கை, சித்தாந்தங்கள் பற்றியெல்லாம் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். பிஹார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரசாந்தின் இந்தச் செயல்பாடுகள் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன.
தோல்விகளின் புள்ளிவிவரம்