மனதிலே ஒரு பாட்டு!- ‘களக்காத்த சந்தனமரம்’ தந்த நஞ்சம்மா


யுதன்
readers@kamadenu.in

“அம்மைக்குப் பிரிதிவிராஜ் யாரானு அறியோ?”
“அறியில்லா.”
“பிஜூமேனன்?”
“அறிஞ்சிட்டில்லா.”
“அம்மா பாடின பாட்டு ஏது சினிமால்லன்னாவது அறியோ?”
“என்டே, எண்டானு?”

கேரளத்தைக் கலக்கிக்கொண்டிருக்கும் ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் ‘களக்காத்தா சந்தனமரம் வேகு வேகா பூத்திருக்கா’ பாடலைப் பாடி நடித்த அட்டப்பாடி நஞ்சம்மாவுக்கும், அவரைப் பேட்டி கண்ட நடிகர் பிரிதிவிராஜுக்கும் இடையில் நடந்த இந்த உரையாடலும் இப்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

தன்னை பாடவைத்து நடிக்க வைத்த அந்த மலையாளப் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர், கலைஞர்கள் என்று யாரைப் பற்றியுமே அறிந்திராத வெள்ளந்தி மனுஷியான நஞ்சம்மா, அட்டப்பாடியில் வசிக்கும் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். மலையாளத் திரையுலகம் தொடங்கி, சின்னத்திரை, யூ-டியூப், வாட்ஸ்- அப் வரை அவரைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் கேரளத்தவர்கள். தமிழகத்திலும் நஞ்சம்மாவின் பாடலுக்கு நல்ல வரவேற்பு.  ‘களக்காத்த சந்தன மரம் வேகு வேகா பூத்திரிக்கா... பூப்பறிக்கன் போகிலாமோ... விமானத்தே பாக்கிலாமோ...’ இருளர் பழங்குடி மக்களின் தாலாட்டு கீதமான இந்தப் பாட்டின் முதல் வரிகளுக்கு அர்த்தம் இப்படிப் போகிறது... ‘கிழக்குக் காட்டில் சந்தனமரம் நிறை நிறைய பூத்திருக்கு... பூப்பறிக்கப் போகலாமா... விமானத்தையும் பார்க்கலாமா...’

x