என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
மாணவர்கள் சமூக வாழ்வை சிறப்புற அமைத்துக்கொள்ளும் வகையில், பாடத்துடன் வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத்தரும்
ஆசிரியர்கள் உண்டு. ஆனால், புரட்சிகரமான தன் வாழ்க்கையின் மூலம் மாணவர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கே சேவை மனப்பான்மையைக் கற்றுத்தரும் ஆசிரியராக வலம்வருகிறார் கமலசெல்வராஜ்.
குமரி மாவட்டத்தின் அருமனை கிராமத்தைச் சேர்ந்த இவர், படந்தாலுமூடு பகுதியில் உள்ள பி.எட் கல்லூரி ஒன்றில் முதல்வராக இருக்கிறார். வறிய பின்னணியிலிருந்து இந்த இடத்துக்கு வந்திருக்கும் இவர் தன் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் பிறருக்கான பாடமாக வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்.
வரதட்சணை தவிர்த்து புரட்சித் திருமணம் செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்த கமலசெல்வராஜ், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண்ணை மணம் முடித்தவர். நண்பர்களின் உதவியுடன் ஆதரவற்றோர் இல்லம் நடத்திவரும் இவர், சமீபத்தில் இந்த இல்லத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு விமரிசையாகத் திருமணம் நடத்தி வியக்கவைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, தன் முழு உடலையும் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக எழுதிவைத்திருக்கிறார்.