கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
வயோதிகம் காரணமாக உடல்நிலையில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு, அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும்கூட, நேரம் கிடைத்தால் பயணங்களையும், இயக்க வேலைகளையும் திட்டமிடுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் சார்பில் மதுரையில் நடந்த, ஜவாஹர்லால் நேருவின் 130-வது ஆண்டு விழாவுக்கு வந்திருந்தவரை ‘காமதேனு’விற்காகச் சந்தித்தேன். அவரது பேட்டி:
இந்தியா குடியரசானபோது நீங்கள் இளைஞர். குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி உங்கள் கருத்தென்ன?
இடைக்காலப் பிரதமராக நேரு பதவியேற்றவுடனேயே அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. கூடவே, தேர்தல் ஆணையத்தையும் ஏற்படுத்தினார். தான் உட்பட அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கலாமா கூடாதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அந்த ஆணையத்துக்கே கொடுத்தார் நேரு.