க்ளென்ஸ்பாட்- படுக்கையைச் சுத்தமாக்கும் ரோபோ!


லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

சிலருக்குப் பயணங்கள் அலுக்கவே அலுக்காது. ‘காலை ஜப்பானில் காபி. மாலை நியூயார்க்கில் காபரே…’ எனும் பாடல் வரிகளுக்கேற்ப ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். ஏதாவது சுற்றுலாத் தலம் பற்றி படித்தால் உடனடியாக அதைக் கண்டுகளிக்க வண்டியேறிவிடுவார்கள். இப்படி பயணம் தொடர்பாக மனதுக்குள் அரிப்பு இருந்துகொண்டே இருப்பதை, ‘An itch to travel’ என்பார்கள் ஆங்கிலத்தில். ஆனால், பல இடங்களுக்குப் பயணம் செய்பவர்கள், அங்கு தங்கும் ஹோட்டல்களில் இன்னொரு அரிப்பையும் எதிர்கொள்ள நேரும். அது, படுக்கையிலும், படுக்கை விரிப்பிலும் உள்ள கிருமிகளால் ஏற்படும் அரிப்பு.

பெரிய ஹோட்டல்களிலும் பிரச்சினை

தற்போது செல்போன் செயலி மூலம், பல தங்கும் விடுதிகளைத் தேர்வுசெய்கிறோம். அதில் கட்டணச் சலுகை பெறுவதில் கவனம் செலுத்துகிறோம். நல்ல ஹோட்டல் என்று நம்பி, குடும்பத்துடன் அங்கு சென்று தங்கிவிட்டு வருகிறோம். கடைசியில் உடல் அரிப்பு மற்றும் சரும நோயுடன் வந்து சேர்கிறோம். இதற்கு முக்கியக் காரணம் படுக்கையில் இருக்கும் கிருமிகள்தான்.

x