காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in
ஒருவனைக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவதைவிட, ஒரு வசனத்தால் அவனைத் திருத்திவிட முடியும் என்பதை மண்டையில் குட்டுவது போல உணர்த்தும் படம்தான் ‘வானம் கொட்டட்டும்’.
தேர்தல் தகராறில் அண்ணனை சிலர் வெட்டிவிட, ஆத்திரத்தில் பழி தீர்த்துவிட்டுச் சிறைக்குப் போகிறார் சரத்குமார். ஊராரின்
பேச்சையும், திட்டையும் கேட்கப் பொறுக்காமல் குழந்தைகளுடன் சென்னைக்குப் பஸ் ஏறிவிடுகிறார் மனைவி ராதிகா. அப்பா வாசமே பிடிக்காமல் வளரும் விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷும் வயதுக்கே உரிய சேட்டைகளுக்குப் பிறகு பொறுப்பாக வியாபாரம் செய்யத் தொடங்குகிறார்கள். அந்த நேரத்தில் சிறையில் இருந்து வெளிவரும் சரத்குமாரும், அந்தக் குடும்பத்தில் இணைய அதன் பிறகு நடக்கும் குழப்பங்களும், துரத்தும் பழைய பகையுமே கதை.
கோபத்தில் அவசரப்பட்டு செய்யும் ஒரு காரியத்தால், சம்பந்தப்பட்டவர் மட்டுமின்றி, அவரைச் சார்ந்தவர்களும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் படத்தின் அடித்தளம். ஆனால், அந்த அன்பின் உணர்வைக் கொஞ்சம் கூட படம் பார்வையாளனுக்கு கடத்தவில்லை.