சுங்கச்சாவடிகளே அடாவடி வசூலுக்கானவைதான்!- பாலபாரதி பாய்ச்சல்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

சுங்கச்சாவடிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான முரண்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமீபத்தில் செங்கல்பட்டு பரணூரில் அரசுப் பேருந்து ஊழியர்களும் பொதுமக்களும் இணைந்து சுங்கச்சாவடியையே உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். இதற்கு முன்னர் சுங்கச்சாவடி ஒன்றில் பிரச்சினையில் ஈடுபட்டதாகப் பேசப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியிடம் பேசினேன்.

 `தரமான சாலை வேண்டும் என்றால் சுங்கக் கட்டணம் கட்டித்தான் ஆக வேண்டும்' என்பது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சரின் கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

அப்படிச் சொல்லியா நான்கு வழிச்சாலை அமைத்தார்கள்? டீசல் செலவை மிச்சம் பிடிக்க, பயண நேரத்தைக் குறைக்கவே இந்தத் திட்டம் என்றுதானே சொன்னார்கள்? அதேநேரத்தில் ஒவ்வொரு சாலையும் பல நூறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுவதால், அந்தக் கடன் அடைபடும் வரையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்கள். ஆனால், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் தினமும் குறைந்தது ரூ.30 லட்சம் முதல் 1 கோடி வரை வசூலாகிறது. சமீபத்தில் உடைக்கப்பட்ட பரணூர் சுங்கச்சாவடியில் மட்டும் தினமும் ரூ.1 கோடி வீதம், 15 ஆண்டுகளில் ரூ.4,500 கோடி வசூலாகியிருக்கிறது. வெறும் 46 கிலோ மீட்டர் சாலையிலேயே இவ்வளவு வசூல் என்றால், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 3,009 கிலோமீட்டர் சாலையில் எவ்வளவு வசூலாகும்? பிறகேன் அந்தச் சாலைகளில் இன்னமும் சுங்கச்சாவடியை மூடாமல் இருக்கிறார்கள்? குறைந்தபட்சம் சாலைகளைப் பராமரிப்பதுகூட இல்லையே? அமைச்சர் வாதப்படியே எடுத்துக்கொண்டாலும், இரண்டு சாலைகள் அல்லவா இருக்க வேண்டும்? தரமான சாலையில் வேகமாகச் செல்ல நினைப்போர் சுங்கச்சாவடி வழியாகவும், அவசரமில்லை என்று எண்ணுபவர்கள் சுங்கக் கட்டணம் இல்லாத சாலையிலும் பயணிக்க வெளிநாடுகளில் போல் ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா?

x