கோபி பிரையான்ட்: விடைபெற்றுக்கொண்ட விளையாட்டு ஆளுமை!


சந்தனார்
readers@kamadenu.in

‘நேஷனல் பேஸ்கட்பால் அசோசியேஷன்’ (என்.பி.ஏ) அமைப்பின் வரலாற்றில் மிக முக்கியமான வீரராகப் போற்றப்படும் கோபி பிரையான்டும் அவரது 13 வயது மகள் கியானாவும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அமெரிக்கர்களை மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள கூடைப்பந்தாட்ட ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மொத்தம் ஒன்பது பேரின் உயிரைப் பறித்த அந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விளையாட்டு வீரர் எனும் பிம்பத்தைத் தாண்டி, சிறந்த வாசகர், ஆஸ்கர் வென்ற குறும்படத்தை உருவாக்கியவர் என அமெரிக்கர்களின் மனதுக்கு நெருக்கமானவராக இருந்தவர் கோபி.
கூடைப்பந்தாட்ட வீரர் ஜோ பிரையான்டின் மகனான கோபி பிரையான்ட் தொடர்பாக, அமெரிக்கர்களின் மனதில் உருவான பிம்பம்,
6 அடி 4 அங்குலம் கொண்ட அவரது தோற்றத்தைப் போல உயர்வானது. அதேசமயம், தீவிரமான விளையாட்டு வாழ்க்கையில் அவர் உடலில் ஏற்பட்ட காயங்களைப் போல, அவர் தனிப்பட்ட வாழ்வில் வடுக்களும் ஏராளம்.

இத்தாலியில் இளமைக்காலம்

1978 ஆகஸ்ட் 23-ல் ஃபிலடெல்பியாவில் பிறந்த கோபி, சிறு வயதிலிருந்தே கூடைப்பந்தாட்டம் ஆடத் தொடங்கினார். அவர் ஆறு வயது சிறுவனாக இருந்தபோது அவரது தந்தைஜோ பிரையான்ட் கூடைப்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்று இத்தாலிக்குக் குடிபெயர்ந்தார்.

x