அன்று நக்சல்பாரி... இன்று நல் மருத்துவர்!- ‘பசலை’ கோவிந்தராஜின் கொள்கைப் பயணம்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

அறை முழுவதும் அமைதி வியாபித்திருக்கிறது. ஹோமியோபதியின் தந்தை என்றழைக்கப்படும் டாக்டர் சாமுவேல் ஹென்மெனின் மார்பளவு சிற்பம். அருகில் சத்குரு வெள்ளை அங்கியில் கை விரித்து நிற்கும் படம். இவற்றுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஊதுபத்தியும் ஏற்றித் தொழுதுவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்கிறார் டாக்டர் கோவிந்தராஜ். இவர் 1980-களின் இறுதியில் நக்சல்பாரி இயக்கமான ‘எம்.எல்’ எனப்படும் ‘மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்’ கட்சியின் தீவிரப் பிரச்சாரகராய் இருந்தவர் என்று சொன்னால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை!

எம்.எல் கட்சியின் ‘மனஓசை’, ‘கேடயம்’ இதழ்களைத் தமிழகமெங்கும் பேருந்து நிலையங்களில் கூவிக் கூவி விற்றவர் இவர். அந்த இதழ்களில் மட்டுமல்லாமல் ‘குதிரை வீரன்’, ‘தோழமை’, ‘புதிய பார்வை’ போன்ற இதழ்களிலும் கதை, கட்டுரைகள் எழுதியவர். 1994-ல், ‘பசலை’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு புகழ்பெற்றவர். அதன் தொடர்ச்சியாக ‘பசலை’ கோவிந்தராஜ் என்று அழைக்கப்பட்டவர். இப்படி தீவிர இடதுசாரியாக இருந்தவர் திசைமாறி இந்த இடத்துக்கு வந்திருக்
கிறார். கோவை பீளமேடு அருகே உள்ள அவரது ஹோமியோ மருத்துமனையில் கோவிந்தராஜை சந்தித்தேன்.

மேஜையில் ஸ்டெதாஸ்கோப், சில மருந்துப் புட்டிகள், டார்ச் லைட், லேப்டாப் இத்தியாதிகளுடன் மகாத்மா காந்தி எழுதிய புத்தகங்களும் சில மருத்துவ நூல்களும் இருக்கின்றன.

x