ஒட்டதேசப் படையெடுப்பின் புதிய உண்மைகள்!- ராஜேந்திர சோழன் வரலாற்றில் ஓர் மீள் பயணம்


கரு.முத்து
muthu.k@kamadenu.in

வரலாறு என்பது இறுதிசெய்யப்பட்ட ஆவணம் அல்ல; கள ஆய்வுகளின் அடிப்படையில் அதில் மாற்றங்கள் சாத்தியம்தான் என்பார்கள். அந்த வகையில், ராஜேந்திர சோழன் படை நடத்திய பாதையில் சென்று, அரிய தகவல்களைத் திரட்டிவந்திருக்கிறது ஒரு குழு. ஒட்டதேசப் படையெடுப்பில் ராஜேந்திர சோழன் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்று சிலர் சொல்லிவந்த நிலையில், அந்தப் படையெடுப்பில் அவர் நேரடியாகப் பங்கெடுத்ததற்கான வலுவான ஆதாரங்களை இந்தக் குழு முன்வைக்கிறது.

கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவர் கோமகன் தலைமையில் முனைவர் சிவராமகிருஷ்ணன், வரலாற்று ஆர்வலர்கள் சசிதரன், சாஸ்தா பிரகாஷ், சந்திரசேகர், சுப்ரமணியன் ஆகியோரை உள்ளடக்கிய இந்த ஆய்வுக் குழு, ராஜேந்திர சோழனின் படை நடைப் பயணத்தின் ஐந்தாம் கட்டத்தில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறது.

வெற்றிச் சின்னம் - ஜெயஸ்தம்பம்

x