மீண்டும் மீண்டும் ரஜினி!


ரஜினி சும்மா இருந்தாலும், சம்பவங்கள் அவரைச் சும்மா விடுவதில்லை. கோவையில் மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் பேருந்து போவதற்கு போதிய இடமில்லாமல் திணறிய காட்சி, குடமுழுக்கு தொடர்பான சர்ச்சை, ‘துக்ளக்’ குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி…இப்படிப் பல செய்திகள், பல சர்ச்சைகள் வந்தாலும், தொடர்ந்து ரஜினிதான் இணையத்தில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளார். இந்த வாரம் அவருக்கு வேறு பெயர் வைத்திருக்கிறது இணைய வட்டாரம். #கந்து வட்டி ரஜினி. வட்டிக்கு விட்டு சம்பாதித்ததாக வருமான வரித் துறையினரிடம் அவர் சொன்ன கணக்கு, மீம்களும், பன்ச்களுமாகத் தீயாகப் பரவுகிறது. மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்றதும் பகடி செய்யப்பட்டது. ‘என்ன சர்ச்சை வந்தாலும், ஏறி மிதிச்சுப் போய்ட்டே இருப்பாரு எங்க தலைவர்’ என்று கொடி பிடிக்கும் ரசிகர்கள், ரஜினியை வைத்து நெட்டிசன்கள் உருவாக்கி உலவவிடும் மீம்களுக்கும் கருத்துகளுக்கும் பதில் சொல்லத் திணறுகிறார்கள்.

ஏழை மாணவர்களின் கல்வித்தரம் உயரவே பொதுத் தேர்வு. - அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர்களின் திறன் உயரவும் ஒரு தேர்வு வைத்தால் நல்லாருக்கும்ல?!- ரஹீம் கஸ்ஸாலி

5.8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு ரத்து செய்வது பற்றி அடுத்த ஆண்டு அரசு பரிசீலிக்கும். - செங்கோட்டையன்

x