கரு.முத்து
muthu.k@kamadenu.in
படபடவென சிறகை அடித்துக்கொண்டும், எதிராளியை மூர்க்கத்துடன் பார்த்துக்கொண்டும் இருக்கும் சேவல்கள் சடாரென பாய்ந்து சண்டையிடுகின்றன. கூடியிருப்பவர்களின் வெறித்தனக் கூச்சலில், சேவல்களின் வேகம் இன்னும் அதிகரிக்கிறது. சில நிமிடங்கள்தான்… இரண்டில் ஒரு சேவல் சோர்ந்து விழுகிறது அல்லது செத்து விழுகிறது. வெற்றி பெற்ற சேவலின் சொந்தக்காரர், வீர மரணமடைந்த சேவலை எடுத்துக்கொண்டு நடையைக்கட்டுகிறார். அடுத்த ஜோடி சேவல்கள் களத்துக்கு வர, ஆராவாரமும் ஆர்ப்
பரிப்புமாகத் தொடர்கிறது சேவல் கட்டு.
அரவக்குறிச்சி அருகில் உள்ள பூலாம்வலசு கிராமத்தில், சமீபத்தில் நடந்துமுடிந்த சேவல் கட்டுப் போட்டியின் பரபரப்புக் காட்சிகள் இவை.
ஜல்லிக்கட்டுக்கு நிகர் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இணையாகப் புகழ்பெற்றது பூலாம்வலசில் நடக்கும் சேவல் கட்டு. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தப் பாரம்பரிய விளையாட்டு நடத்தப்பட்டாலும் பூலாம்
வலசுதான் சேவல் சண்டையின் அக்மார்க் அடையாளம்.