என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
மண்ணின் மைந்தர்களின் படைப்புகளைச் சுமக்கிறேன்!- ஒரு ஸ்டேஷனரி கடைக்காரரின் இலக்கிய தாகம்
ஒரு ஸ்டேஷனரி கடையில் பென்சில், பேனா, நோட்டுகள், ஜியாமென்ட்ரி பாக்ஸ் இவைதானே இருக்கும்? ஆனால், ஒரு ஸ்டேஷனரி கடையில் இலக்கியப் புத்தகங்கள், அதுவும் உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகள் விற்பனைக்குக் கிடைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? குமரி மாவட்டம், தெங்கம்புதூர் கிராமத்தின் அரசு மேல்நிலைப் பள்ளியின் எதிரே இருக்கும் ஸ்டேஷனரி கடையில் இதைப் பார்க்கலாம். அங்கே விற்பனைக்கு அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் கடையின் உரிமையாளர் எழுதிய புத்தகமும் உண்டு என்பது இன்னும் விசேஷம்!
பக்கத்திலேயே காய்கறிச் சந்தை, பேருந்து நிறுத்தம், வங்கி என எந்நேரமும் பரபரப்பாக இயங்கும் சூழலுக்கு நடுவில் இருக்கிறது இந்த ஸ்டேஷனரி கடை. இரைச்சல்களுக்கு மத்தியில் கடையின் மையப் பகுதியில் அமர்ந்து மும்முரமாக எதையோ எழுதிக்
கொண்டிருக்கிறார் கடையின் உரிமையாளர் கிருஷ்ணகுமார்.