உள்ளம் கவரும் யூரோப்பியன் பீ-ஈட்டர்- அரிதாகக் காணக் கிடைத்த அற்புதம்!


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

வன விலங்குகளின் அற்புதத் தருணங்களைக் கேமராவில் சிறைப்படுத்தும் பறவைக் காதலரான வடவள்ளி சுப்பிரமணியன், கீரிப்பிள்ளை, உடும்பு போன்றவற்றின் அபூர்வமான புகைப்படங்களை காமதேனு வாசகர்களின் பார்வைக்கு விருந்தாக்கியவர். இந்த முறை, ‘யூரோப்பியன் பீ-ஈட்டர் (European Bee-Eater)’ எனும் அரிதான பறவையைப் படம்பிடித்த அனுபவத்தைச் சுவை ததும்ப விவரிக்கிறார்.

“பறவைகள் என்றாலே அழகுதான். அதிலும் பல வண்ணம் கொண்ட வெளிநாட்டுப் பறவையைப் பார்ப்பதைவிட ஒரு பறவைக் காதலனுக்கு வேறென்ன சந்தோஷம் வேண்டும்? அப்படித்தான் அண்மையில், மருதமலைக் காட்டில் இந்தப் பறவையைப் பார்த்தேன்.

அடிவயிற்றில் பச்சை வெளிர்நீலம் கலந்த வண்ணம். இறகு மற்றும் பிடரியில் பழுப்பு நிறம். கூரிய கரிய நிற மூக்கு என்று ஈர்க்கும் அழகு கொண்ட பறவை இது. 200 அடி உயரத்துக்கு மேல் பறக்கும் தேனீ, ஈ, பூச்சிகளைப் பறந்து பறந்து பிடித்துச் சாப்பிடுகிற ஐரோப்பியப் பறவையினம். இதை ஐரோப்பியப் பஞ்சுருட்டான் அல்லது ஐரோப்பிய ஈ பிடிப்பான் என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நவம்பரில் இங்கு வரும். மார்ச் மாதம் வரை நம் காடுகளில் எங்காவது காணப்படும். பிறகு காணாது போய்விடும். இது பறக்கும்போது படம் பிடிப்பது எளிதல்ல. ஏதாவது ஒரு மரக் கிளையில் அல்லது மின் கம்பத்தில் அமரும்போது எடுத்தால்தான் உண்டு. அதுபோன்ற தருணத்திலும் கேமராவை முடுக்குவதற்குள் சட்டென பறந்துவிடும்.

x