அப்ரைட் கோ- நிமிர்ந்த நன்னடைக்கு ஒரு சாதனம்


லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

குனிந்து நடப்பது, குனிந்து உட்கார்வது போன்றவை நம்மில் பலருக்கும் உள்ள பழக்கம்தான். அதிலும் செல்போன் வரவுக்குப் 
பிறகு நடந்துகொண்டே, படுத்துக்கொண்டே, உட்கார்ந்துகொண்டே செல்போன் பார்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. இதனால், நம் கழுத்து, தோள் பட்டை எலும்புகளும் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவுகள் இப்போது சின்ன வயதிலேயே தெரிய ஆரம்பித்துவிடுகின்றன. வயதான பின்னர் வரும் முதுகு கூனல் பிரச்சினை, இப்போது சிறுவர்களிடம்கூட காணப்படுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல், பலரையும் பாதிக்கும் பிரச்சினை இது.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பார்கள் அல்லவா? அதேபோல், செல்போன் செயலியுடன் இணைக்கப்
பட்ட ஒரு நவீன சாதனத்தைப் பயன்படுத்தியே இந்தக் கூனல் பிரச்சினையைச் சரி செய்ய முடியும். ‘அப்ரைட் கோ’ (Upright Go) எனும் சாதனம் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

தோரணை மாற்றப் பாதிப்புகள்

x