வெட்டிப் போட்டாலும் திராவிட இயக்கத்தில்தான் இருப்பேன்!- நாஞ்சில் சம்பத் ‘நச்’ பேட்டி


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

அரசியல் மேடைகளில் அனல் பறக்கவைத்த நாஞ்சில் சம்பத் தற்போது இலக்கியம், திரைப் பயணம் என ஜாகையை மாற்றி பயணித்துக் கொண்டிருக்கிறார். திருச்சியில் இலக்கிய நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, தனது சொந்த ஊரான  மணக்காவிளைக்கு வந்திருந்தவரை ‘காமதேனு’வுக்காக சந்தித்து கேள்விகளை அடுக்கினேன். தனக்கே உரித்தான இலக்கிய நடையில் அவர் சொன்ன பதில்கள் இதோ...

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நெல்லை கண்ணன் பேசியதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. அதேநேரம் அவரது கைதுக்கு முன்னால் சங் பரிவார் சக்திகள் அவரைத் தாக்க முனைந்ததும், உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருக்கு சிகிச்சையளிக்கக் கூடாதென
ஆர்ப்பாட்டம் செய்ததும் அருவருக்கத்தக்க செயல்கள். நெல்லை கண்ணன் பேச்சில் வன்முறை தொனி இருந்ததை ஏற்கிறேன். ஆனால், அது அவர் வலிந்து சொன்னது இல்லை என்பதே நிஜம். வட்டார வழக்கில் இயல்பாக வந்துவிழுந்த வார்த்தை அது.
அதற்காக, கம்பனில் கரைந்து, பாரதியில் தேய்ந்து, கண்ணதாசனில் தன்னை இழந்து, இலக்கிய மேடையே வாழ்வென வாழ்ந்தவரை உளவியல் சித்திரவதைக்கு உள்ளாக்குவது அபத்தம். அதிமுகவினரை மிக மோசமாக விமர்சித்த குருமூர்த்தி, பெண் பத்திரிகை
யாளர்களை மோசமாக விமர்சித்த எஸ்.வீ.சேகர், திட்டமிட்டு பீதியை உருவாக்கும் எச்.ராஜா போன்றோரை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்க வேண்டிய நேரம் இது.

x