தங்கத்திலே எழுத்தெடுத்து... பொன்னுக்குத் தரம் சொல்லும் பெண் கவி!


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

எழுத்துலகின் பிரஜையாகக் குடியுரிமை பெற எந்தச் சான்றிதழையும் காட்டத் தேவையில்லை. சக மனிதர்களின் மனவோட்டத்தைப் படிக்கத் தெரிந்தவர்களின் கைகளில் பேனா கிடைத்தால், அவர்களும் பரந்துவிரிந்த படைப்புலகத்தின் பிரஜைகளே! வெவ்வேறு தொழில் பின்னணி கொண்டவர்கள் படைப்புலகத்தில் கால் பதிப்பது இப்படித்தான். அந்த வரிசையில் நகைகளைத் தர மதிப்பீடு செய்யும் தனலெட்சுமி பரமசிவமும் ஒரு நல்ல கவிஞராக அறியப்படுகிறார்.

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் தன் கணவர் பரமசிவத்தோடு சேர்ந்து ‘நியூ கோல்ட் டெஸ்டிங்’ என்னும் கடையை நடத்திவரும், தனலெட்சுமி, ‘கற்பனை மலர்கள்’ எனும் கவிதைத் தொகுப்புக்குச் சொந்தக்காரர். தரம் நிர்ணயிக்கும் கருவியில் வைத்து தங்க நகைகளைத் துல்லியமாக மதிப்பீடு செய்துகொண்டிருக்கும் இவர், மறுபக்கம் மனித வாழ்வின் அசல் தருணங்களையும் மதிப்பீடு செய்து எழுத்துவடிவில் செதுக்கிவருகிறார்.

நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் நகைப் பட்டறைகளில் செய்யப்படும் நகைகள் தர மதிப்பீட்டிற்காக இவர்களின் கடைக்கு வருகின்றன. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இடைவிடாது தரநிர்ணயப் பணியில் இருக்கும் தனலெட்சுமி, இதற்கு மத்தியில் எழுதுவது எப்படி?

x