சின்னப் பொண்ணு தலைவியாகக் கூடாதா?- சாதிக்க வந்திருக்கும் சந்தியா ராணி


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

‘ஒரு கல்லூரி மாணவி ஊராட்சி மன்றத் தலைவராகிறார்’ என்று நாடே வியக்கும்படி வெற்றி பெற்றிருக்கிறார் சந்தியா ராணி. பிபிஏ இறுதியாண்டு படிக்கும் இந்த இளம் பெண்ணின் வெற்றியை இவரது ஊரான கே.என்.தொட்டி எனும் காட்டுநாயக்கன் தொட்டியே கோலாகலமாகக் கொண்டாடுகிறது. சந்தியா ராணியைச் சந்திக்க கோவையிலிருந்து வண்டியேறினேன்.
கிருஷ்ணகிரி, சூளகிரி மேற்குப் புறம் உள்ள மேட்டில், ‘பெங்களூரு, வழி - பேரிகை’ என கன்னடம், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு தனியார் பேருந்து நின்றது. அதில் ஏறினால், முக்கால் மணி நேரப் பயணத்தில் பேரிகை எனும் ஊர் வந்தது. இங்கிருந்து காட்டுநாயக்கன் தொட்டி கிராமத்துக்குச் செல்ல 2 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

பேரிகையில் என்னுடன் இறங்கிய ஓர் இளைஞர், “இந்த ஊருக்கு ஒரே ஒரு பஸ்தான் இருக்கு. அதுவும் சரியா வர்றதில்லை. இங்கிருந்து 8 கிலோமீட்டர்ல மழகலக்கி ஆந்திரா பார்டர். 1.5 கிலோமீட்டர் தூரத்துல அனிக்கரைஹள்ளி கர்நாடகா கிராமம்” என்று தகவல்களை அடுக்கிவிட்டுச் சென்றார்.

ஊருக்குள் நிறைய வீடுகள். ஓரிடத்தில் பெண்கள் கூட்டமாக நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களை அணுகி சந்தியா ராணி பற்றி விசாரித்தேன். “இதுதாங்க அந்தப் பொண்ணு” என்று சிலர் சொல்ல, கூட்டத்துக்குள் இருந்து சிரித்தபடி வந்து வணக்கம் சொல்கிறார் சந்தியா ராணி.

x