இது இரண்டாவது சுதந்திரப் போர்!- தகிக்கும் தமீமுன் அன்சாரி


கரு.முத்து
muthu.k@kamadenu.in

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் கறுப்பு உடையும் கையில் தேசியக் கொடியுமாக வந்து கவனம் ஈர்த்தார் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவர் முன்னெடுத்த இந்த வித்தியாச முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஜனவரி 7-ல் பதாகை ஏந்தி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டு வந்தவரிடம் உரையாடினேன்.

எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டுத்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறுகின்றன 
என்று பாஜக குற்றம் சாட்டுகிறதே?

கடந்த பத்தாண்டுகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் வீழ்ச்
சியைச் சந்தித்திருக்கிறது. 40 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருக்கிறது. ஆயிரக்கணக்
கான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் மறைக்கவும், இவற்றிலிருந்து மக்களைத் திசைதிருப்ப
வுமே இதுபோன்ற சட்டங்களைக் கொண்டுவந்து சர்ச்சைக்குரிய வகுப்புவாதப் பிரச்சினையைக் கையிலெடுத்திருக்
கிறது பாஜக அரசு. பாஜகவின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட இந்திய மக்கள், தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் இறங்கியுள்ள
னர். தற்போது போராட்டம் தலைவர்கள் கையிலிருந்து மக்கள் கைக்கு மாறியுள்ளது. மக்களை மதரீதியாகப் பிரிக்க நினைத்த பாஜகவின் எண்ணம் ஈடேறவில்லை. மக்கள் மதங்களைக் கடந்து இந்தியர்களாக இணைந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாக 12 மாநிலங்களின் முதல்வர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், பாமக போன்ற கட்சிகளும் இச்சட்டங்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றன. தமிழகத்தில் இப்போராட்டத்தில் திமுக போன்ற பெரிய கட்சிகளும் தங்களை இணைத்துக்கொண்டிருப்பதை வரவேற்கிறோம். அதிமுகவும் இணைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

x