ஆசிரியர்களை கற்பித்தலை ஒதுக்கும் மனநிலைக்குத் தள்ளுவது எது?


உமா
uma2015scert@gmail.com

இந்தத் தொடரில் அரசுப் பள்ளிகள் குறித்த பல பிரச்சினைகளைப் பேசி வருகிறோம். அவற்றுள் தலையாய பிரச்சினையாக இருப்பது கற்றல் - கற்பித்தலுக்கான சூழல் பாதிக்கப்பட்டுக் கிடப்பது தான். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று அடுத்தடுத்து புதுப் புது அரசாணைகளை வெளியிட்டு வருகிறது அரசு. ஆனால், வகுப்பறைகளில் கற்றல் - கற்பித்தல் முழுமையாக நடந்தால் தான் கல்வியின் தரம் உயரும் என்ற அடிப்படைப் புரிதலுடன் இந்த அரசாணைகள் வெளியிடப்பட்டால் இன்னும் சரியாக இருக்கும்‘ஆசிரியர் பணி அறப்பணி... அதற்கே உன்னை அர்ப்பணி’ என்ற வரிகளுக்கு ஏற்ப கற்பித்தல் பணியில் தங்களை செம்மையாக ஈடுபடுத்திக் கொள்ளும் ஆசிரியர் கள்கூட இப்போதெல்லாம் சலிப்படைந்து வருகிறார்கள். காரணம், கற்றல் - கற்பித்தல் பாதிக்கப்படுவதுதான்.

பாடம் சுமையாவது ஏன்?

பொதுவாக, கற்பித்தலை எந்த ஒரு ஆசிரியரும் வெறுப்பதில்லை. ஆனால், தற்போதைய பாடங்கள் மாணவர்களது திறமைக்கும் அதிகமாகவே உள்ளது. அதனை திறம்படக் கற்பிக்கத்தான் ஆசிரியர்களுக்கு நேரம் போதவில்லை. 

x