லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
ப ரபரப்பான இன்றைய உலகில் தூக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குப் பஞ்சமேயில்லை. சிலருக்குத் தூக்கத்துக்குள் நுழைவதே பெரும் பிரச்சினையாக இருக்கும். உருண்டு புரண்டாலும் உறக்கம் இரக்கம் காட்டாமல் எட்டியே நிற்கும். நள்ளிரவைக் கடந்து அதிகாலையில்தான் ஆழ்ந்த உறக்கமே வரும். அந்த அலுப்பில் மறுநாள் கண் விழிக்கவே மனசு வராது. போர்வைக்குள் சுருண்டபடி உருண்டு கொண்டிருப்பார்கள். இப்படியானவர்களுக்காக வந்திருக்கும் வரப்பிரசாதம்தான், ‘சாம்னியோ சன்ரைஸ் வேக் அப் அண்ட் ஸ்லீப் தெரபி லைட்’ (Somneo Sunrise Wake Up and Sleep Therapy light) .
தூக்கம் வருவதற்கு ஒரு மெல்லிய தாலாட்டு; தூங்கி எழும்போது நெற்றியில் லேசான வருடல் - பரிதாபத்துக்குரிய மனித மனம் இதைவிட பிரமாதமாக வேறு எதைத்தான் எதிர்பார்க்கும்?
இப்படி ஒரு சுகமான, நிதானமான தூக்கமும் விழிப்பும் இருந்தால் அந்த நாள் இனிய நாளாகத்தான் இருக்கும். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் இந்தக் கருவியைத் தயாரித்திருக்கிறார்கள் பிலிப்ஸ் நிறுவனத்தார்!