இது ஒரு குப்பைக் கலை!- காலி பாட்டில்களை கலை வடிவங்களாக்கும் அபர்ணா


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

சாலையோரம் வீசப்படும் பாட்டில்களைப் பார்த்து அசூசையாக ஒதுங்குபவர்கள் ஒரு ரகம். அவற்றை அகற்றி, இடத்தைச் சுத்தம் செய்ய முயல்பவர்கள் இன்னொரு ரகம். அதையே அள்ளிச் சென்று, தனது கலைத்திறனால்  அழகிய படைப்புகளாக உருமாற்றுபவர்கள் தனி ரகம். அப்படியான சமூக அக்கறையுள்ள படைப்பாளிதான் அபர்ணா!

கொல்லத்தில் இறங்கி, ‘குப்பி’ (பாட்டில்) என்று சொன்னால் சின்னப்பிள்ளைகூட அபர்ணாவின் வீட்டுக்குப் பாதை காட்டுகிறது. பி.எட்., படிக்கும்  அபர்ணா, சாலையோரம் தூக்கி வீசப்படும் பாட்டில்களைச் சேகரித்து அவற்றில் ஓவியங்கள் வரைந்து, அழகிய கலைப்பொருட்களாக மாற்றுபவர். இதற்கென்று இவர் வைத்திருக்கும் ஃபேஸ்புக் பக்கத்தை இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். சூழலைக் காக்க அபர்ணா எடுத்திருக்கும் இந்த அழகிய முயற்சி கொல்லம் மக்களால் கொண்டாடப்படுகிறது.
கொல்லத்தை அடுத்த மன்றோதுருத்து தீவில் இருக்கிறது அபர்ணாவின் வீடு. வீட்டில் பிரத்யேகமாக இரண்டு அறைகளைத் தனது ஓவியக் கலைக்காக ஒதுக்கியிருக்கிறார் அபர்ணா. அந்த அறைகள் முழுவதும் பாட்டிலில் செய்யப்பட்ட, கலை நுட்பம் வாய்ந்த ஓவியங்கள் வசீகரிக்கின்றன. மனதை அள்ளும் அந்த ஓவியங்களைத் தாங்கி நிற்பனவற்றில் பெரும்பாலானவை காலி மது பாட்டில்கள்தான்!

“எப்படி வந்தது இப்படி ஒரு வித்தியாசமான ஆர்வம்?” என்று அபர்ணாவிடம் கேட்டேன்.

x