ஆடி அசைஞ்சு வருது அழகர்சாமி குதிரை!


கரு.முத்து
muthu.k@kamadenu.in

குழந்தைகள் எப்படி பள்ளிக்குச் செல்வார்கள்? சிலர் நடந்து செல்வார்கள், சிலர் அம்மாவின் கரம் பிடித்து நடப்பார்கள், சிலர் அப்பாவின் பைக்கில் அமர்ந்து செல்வார்கள். நகரத்துப் பிள்ளைகள் வேன், பஸ்களில் செல்வார்கள். ஆனால், ஒரு ராஜகுமாரனைப் போல தினமும் குதிரை மீதமர்ந்து பள்ளிக்குச் செல்லும் சிறுவனைப் பார்த்திருக்கிறீர்களா?

மணப்பாறை தாலுகா மருங்காபுரி அருகேயுள்ள வளநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் அழகர்சாமி என்கிற வேலு, அருகில் உள்ள வாடிப்பட்டி கிராமத்திலிருந்து குதிரையில்தான் தினமும் பள்ளிக்குச் செல்கிறான். அழகர்சாமியைச் சுமந்துவரும் எட்டு வயது குள்ளக் குதிரையான சின்கா, குதூகலத்துடன் ஆடிவரும் அழகைப் பார்க்கவே கூட்டம் கூடிவிடுகிறது.

பள்ளிக்கு அருகில் வந்ததும், பவ்யமாய் குதிரையை விட்டு இறங்கி அதைக் கட்டிவிட்டு பள்ளிக்குள் நுழைகிறான்.

x