கேலிக்கூத்தாகியிருக்கும் நீதி!- கஷோகி வழக்கில் குவியும் கண்டனங்கள்


சந்தனார்
readers@kamadenu.in

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை வழக்கின் தீர்ப்பு சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் தொடர்புடைய ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மூன்று பேருக்குச் சிறை தண்டனை விதித்திருக்கும் சவுதி நீதிமன்றம், மற்ற மூவரை வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், நெஞ்சைப் பதறவைத்த அந்த மரணத்துக்கு நீதி கிடைத்துவிட்டதாகத் தெரியலாம். ஆனால், இது நீதியைக் கேலிக்கூத்தாக்கியிருக்கும் தீர்ப்பு என்பதுதான் சர்வதேசப் பார்வையாளர்களின் கருத்து.

இந்தப் படுகொலையின் ஆணி வேராக இருந்தவர்கள் – குறிப்பாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும், அவரது நெருங்கிய உதவியாளர்களும் - தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்கள் என்பதுதான் இந்த விமர்சனத்துக்குக் காரணம்.

அரச விமர்சகர்

x